Monday, October 23, 2023

எல்லை தெரியாத பிரபஞ்சம் நீ

எல்லை தெரியாத பிரபஞ்சம் நீ 


மனம் முழுவதும் நிரம்பி இருக்கிறாய் என்பது தவறு 

மனதுக்கு எல்லை ஏது ? 

எல்லை இல்லாத பிரபஞ்சம் தானே மனசு 

மனசெல்லாம் நீயே அல்ல, மனசே நீ தான். 

உருவமற்ற பிரபஞ்சமானவள் நீ 

காற்றுக்கு உயிர் கொடுக்கும் மூச்சானவள் 



Friday, September 29, 2023

காற்று இல்லாமல் உயிரேது ?

 

விடும் மூச்சு காற்றை பற்றி அனுதினமும் நினைப்பதில்லை

துடியா துடிக்கும் இதயத்தை நொடிபொழுதும் யோசிப்பதில்லை 

இமை மூடா கண்களை கண்கொத்தியா பார்ப்பதில்லை எப்போதும்

கேட்க்கும்  காதுகளை செவிகொடுத்து கேட்டுக்கொண்டே இருப்பதில்லை 

உன்னை நினைக்கும் மனதை ஞாபக படுத்திக்கொண்டே இருக்க வில்லை 

நீ இல்லாமல் நான் வாழவில்லை ...நானாகவே நீ இருக்கிறாய் 

நானிருந்தும் என்னை நினைப்பதில்லை ..ஏனேனில் என்னில்

காற்றாய் ஒலியாய் பார்வையாய் ...எல்லாம் நீயாய் உயிராய்  இருக்கிறாய்.  




Tuesday, August 29, 2023

நேசிப்பிற்கான மொழி மெளனமானது !!


பேசும் வார்த்தைகளின் சத்தங்கள் அற்று போயின.

பார்த்த பார்வைகள் மறைந்து சென்றன 

நடந்தவைகள் கடந்தவைகளாகின.

எண்ணங்கள் உறங்கி போயின 

ஒவ்வொரு இதய துடிப்பும் உன்னை சுவாசமாக உள்வாங்கின ..

நொடிகளுக்கு இடையிலான நேரம் கூட  உன்னை நினைக்காமல் இருப்பதில்லை ..

உன்னை நேசிப்பதற்கான என் மொழி மெளனமானது 

அந்த மெளனமே  உனக்கான மொழியாகின ..!!! 




Friday, July 7, 2023

நானாக நீ!!!



காத்திருந்த நாட்கள் , மணி துளிகள் , நொடிகள்..

ஆசை போட்டு இருந்த நேரங்கள்.

உன்னை பார்க்காத நேரங்கள், நினைக்காத தூக்கம், 

கனவில் வந்த நீ, 365 நாட்கள் வருடத்தில்...அனைத்திலும் நீயே.

நானாக நீ இருந்தாய். என் மனசாகி போனாய்.

என்னருகில்..இல்லை உன்னருகில் சில நேரங்கள் இருந்தும் நான் ஊமையாகி போனேன், உள்ளத்திலே எரிமலையாய் சிதறி போனேன்...



இந்த வாழ்க்கை , உறவுகள், பணம், சமுதாயம், ..இந்த மொழியில் படைத்த அத்தனை விசயங்களும் என்னில் அடங்கி போனாய் நீயாக..

நானாக நான் இல்லை. நீயாக நான் இருக்கிறேன். இல்லை. நானாக  நீ இருக்கிறாய் ...


நான் செய்த புண்ணியமா,  

நீயாக நான்..எண்ணத்தில்  மட்டுமா? 


என் மனதின் உருவமா நீ? நீயாக  என் மனசு..

உயிரில்லாமல் நீயும் உடலில்லாமல் நானும் வாழும் இந்த பிறவி .. 

உயிர் இங்கேயேயும் உடல் அங்கேயும் ..நானாக நீ!!!  

Sunday, March 5, 2023

தாங்காது

தாங்க முடியாத துக்கத்தை பார்த்து இருக்கிறேன் 

தாங்க முடியாத  சந்தோசத்தை உன்னால் மட்டுமே உணர்க்கிறேன் உனது கோபம் உனது சிரிப்பு உனது பேச்சு உனது பார்வை உனது முகபாவனை அனைத்தும் ஒன்றையே தருகிறது

அது மனதுக்குள் எல்லை இல்லா மமகிழ்ச்சி

வாழும் நொடிகள் பூராவும் உன்னோடு  பொழுது கழிக்கும் வரம் வேண்டும் ..

இதுவரை யாருக்கும் கிடைக்காத பேரதிஷ்டம் வேண்டும் 

நேசிப்பதில் முதன்மையானது பெண்மை.

ரசிப்பதில் முதன்மையானது பெண்மை.

இன்பத்தில்   முதன்மையானது பெண்மை.

துன்பத்தில்   முதன்மையானது பெண்மை.

மனதை ஆட்கொள்வதில் முதன்மையானது பெண்மை.

மனதை கொல்வதில் முதன்மையானது பெண்மை.

மயக்குவதில் முதன்மையானது பெண்மை

நினைப்பில் முதன்மையானது பெண்மை

நிம்மதியில் முதன்மையானது பெண்மை

எல்லாவற்றிலும் முந்தி கொள்கிறாய் ..

என்னில் தோன்றும் அத்தனை செயல்களும் உனக்கானதே 

உன் நினைவின்றி  ஒரு போதும் உறங்காது இந்த மனசு

உன்னால் நான் பெரும் சந்தோசம் இந்த மனம் தாங்காது.

நீ தொலைந்து விடு என்னில் ..என்னை தொலைத்து விடு.

தவிக்க விடாதே தாங்காது இந்த இதயம் 

Saturday, March 4, 2023

நீ


நீரின்றி அமையாது உலகு

நீயின்றி அமையாது என் உலகு 

நீ வாழும் மண்ணில் நான் இருப்பது பூர்வஜென்ம பலன் 

நீ பேசும் வார்த்தைகளை கேட்பது காதுக்கு வரம்

நீ பார்க்கும் பார்வையில் நான் இருப்பது தெய்வத்தின் கருணை

நீ விடும் சுவாசத்தில் ஒவ்வொரு நொடியிலும் நான் உயிர்ப்பது கொள்கிறேன்

நீ என்பது நீயில்லை..என் உலகம் , என் ஜென்மங்கள் ..என் பிரபஞ்சம்

நீ பிரபஞ்சத்தின் பேரழகி   

  

Monday, February 27, 2023

உயிரானவள்...


அத்தனை நட்சத்திரங்களும் சேர்ந்தாலும் உன்னால் என்னுள் ஏற்படும் வெளிச்சம் பல பிரபஞ்சகளை தாண்டியும் ஒளிரும் 

ஆயிரம் வெற்றிகள் பெற்றாலும் கிடைக்காத ஆனந்தம்  உன்னை பார்க்கும் போது ஏற்படும் பேரானந்தம் 

மலையையும் மழையையும் , மண்ணையும் , மரங்களையும் , மலர்களையும் பார்க்கும் போது வாராத ஆனந்தம் உன்னை பார்க்கும் போது வருகிறது பேரானந்தம்

கடந்த போன  கோடிக்கணக்கான  ஆண்டுகளோ இல்லை இன்னும் கணக்கில் எண்ணமுடியாது முடிவில்லா ஆண்டுகளோ அத்தனை காலத்திற்கும் நீயே வியாபித்து இருப்பாய் . 

தாங்க முடியாத சோதனைகள் வந்தாலும் , நீ நினைவில் வரும் போது அத்தனையும் காணாமல் போகும் 

நினைவிலும், பேச்சிலும், பார்வையிலும் இரத்ததிலும் உயிரானவள்

பல பிரபஞ்சம்களுக்கு  தாயுமானவள்...

என்னை மீட்டு மீண்டும்  உயிர் கொடுத்தவள் .

.என் உயிரானவள்.  

 

Wednesday, February 15, 2023

நாகரிக மனிதனாக...

நாகரிக மனிதனாக...


என்னை நாகரிக மனிதனாக நினைத்துக்கொண்டேன் 

நினைப்பதெல்லாம் பேச  முடியாது

செய்வது எல்லாம் செய்ய முடியாது 

மனிதமற்று முயற்சித்தாலும் சீரழிந்து போவேன் இந்த நவநாகரீகத்தில்

என்னை நான் மறந்தால்

என்னை நான் தொலைத்தால் உன்னை மறப்பதற்கும் தொலைப்பதற்கும் சமம்.

என்னருகில் எனக்காக நீ உனக்காக நான் இல்லாவிட்டாலும் 

உன்னை பார்ப்பதும் ,நினைப்பதும் சுகம், நிம்மதி, சந்தோசம் ..

என்னால் உனக்கு சந்தோசமா நிம்மதியா என தெரியாது. 

உனக்கு தொல்லை இல்லாமல் தள்ளி நின்று நேசிப்பது தான் 

என்னை நான் நாகரிக மனிதனாக நினைக்கிறேன்..

எனக்கு மட்டுமல்ல இந்த நாகரிக சமூகத்துக்கும் தான்.


Tuesday, February 14, 2023

உனக்கு தெரியாது தான்

உனக்கு தெரியாது தான் 

இயற்கையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று இயற்க்கைக்கு தெரியாது 

மழையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மழைக்கு  தெரியாது 

பூக்களை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று  பூக்களுக்கு தெரியாது 

வானத்தை   யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று வானத்துக்கு   தெரியாது 

மலையின் அழகை  யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மலைக்கு   தெரியாது 

---

அது போல 

---

உன் அழகை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று உனக்கு தெரியாது 

நீ தான் பிரபஞ்ச அழகி என்று இந்த பித்தன் பிதற்றுவதும் உனக்கு  தெரியாது


என் மனசை பற்றி உனக்கு தெரியாது தான் 


 


Monday, February 13, 2023

உணர்வகளும், உணர்ச்சிகளும்

உணர்வகளும், உணர்ச்சிகளும் 

என்னின் ஒரே மாதிரியான உணர்வுகளோ, உணர்ச்சிகளோ மட்டுமே உன்னை  நேசிப்பதாகாது...

உன் எல்லா உணர்வுகளுக்கும்  உணர்ச்சிகளும் மறைந்து இருக்கிறது  என்னுள்ளும் 

ஆச்சரியமும்  இல்லை ஆத்திரமும் இல்லை எப்பவும் கடலில் விழுந்த பெருக்கல் போல தான் என்னுள் நீ புதைந்து இருக்கிறாய். 

உன் உணர்ச்சி ததும்பலும் , முதுமையாகின்ற தோலும் என் கண்களை தாண்டி உளளே செல்வதில்லை.

இதயம் என்னும் மூளைக்குள் முத்தெடுக்கிறாய்.

நீ தொலையாமலே உன்னை தேடுகிறேன் வெளியே !

உணர்வுகளும் உணர்ச்சிகளும் காட்டாமலே உளளே !!


 


Wednesday, February 8, 2023

உன்னருகில் நானிருக்கும் போதும்!

 உன்னருகில் நானிருக்கும் போதும்!


அது போதுமே ..உன்னருகில் நானிருந்தால்.. வேற என்ன வேணும்?

வாயடைத்து போகவில்லை ...

செவிமடுத்து போகவில்லை ..

கண்ணிமைக்க வில்லை..

அத்தனையும் உன்னை மட்டுமே உள்ளடக்கியது ..

மனம் மட்டும் என்னை விட்டு உன்னோடு பல பிரபஞ்சகளை கடந்து சென்று கொண்டு இருந்தது..

பிரபஞ்சத்துக்கு எல்லை இல்லை..

உன்னை நேசிப்பத்துக்கும் ஒரு அளவே இல்லை. 

என் அதனை செல்களையும் செதுக்கிறாய்..உயிரோடு..!!!.

Saturday, February 4, 2023

என்ன தவம் செயதேன்!!

 என்ன தவம் செயதேன்!! 

உன்னருகில் ..

உன்னெதிரில் ..

கண்கள் பார்க்க

செவிகள் கேட்க 

மனம் நினைக்க ...

பல ஆயிரம் நொடிகள் கடக்க ..

 இதற்காகவா ஏழு ஜென்மங்களாகா தவம் செயதேன்?