நாகரிக மனிதனாக...
நாகரிக மனிதனாக...
என்னை நாகரிக மனிதனாக நினைத்துக்கொண்டேன்
நினைப்பதெல்லாம் பேச முடியாது
செய்வது எல்லாம் செய்ய முடியாது
மனிதமற்று முயற்சித்தாலும் சீரழிந்து போவேன் இந்த நவநாகரீகத்தில்
என்னை நான் மறந்தால்
என்னை நான் தொலைத்தால் உன்னை மறப்பதற்கும் தொலைப்பதற்கும் சமம்.
என்னருகில் எனக்காக நீ உனக்காக நான் இல்லாவிட்டாலும்
உன்னை பார்ப்பதும் ,நினைப்பதும் சுகம், நிம்மதி, சந்தோசம் ..
என்னால் உனக்கு சந்தோசமா நிம்மதியா என தெரியாது.
உனக்கு தொல்லை இல்லாமல் தள்ளி நின்று நேசிப்பது தான்
என்னை நான் நாகரிக மனிதனாக நினைக்கிறேன்..
எனக்கு மட்டுமல்ல இந்த நாகரிக சமூகத்துக்கும் தான்.