நீ
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது என் உலகு
நீ வாழும் மண்ணில் நான் இருப்பது பூர்வஜென்ம பலன்
நீ பேசும் வார்த்தைகளை கேட்பது காதுக்கு வரம்
நீ பார்க்கும் பார்வையில் நான் இருப்பது தெய்வத்தின் கருணை
நீ விடும் சுவாசத்தில் ஒவ்வொரு நொடியிலும் நான் உயிர்ப்பது கொள்கிறேன்
நீ என்பது நீயில்லை..என் உலகம் , என் ஜென்மங்கள் ..என் பிரபஞ்சம்
நீ பிரபஞ்சத்தின் பேரழகி