Friday, September 29, 2023

காற்று இல்லாமல் உயிரேது ?

 

விடும் மூச்சு காற்றை பற்றி அனுதினமும் நினைப்பதில்லை

துடியா துடிக்கும் இதயத்தை நொடிபொழுதும் யோசிப்பதில்லை 

இமை மூடா கண்களை கண்கொத்தியா பார்ப்பதில்லை எப்போதும்

கேட்க்கும்  காதுகளை செவிகொடுத்து கேட்டுக்கொண்டே இருப்பதில்லை 

உன்னை நினைக்கும் மனதை ஞாபக படுத்திக்கொண்டே இருக்க வில்லை 

நீ இல்லாமல் நான் வாழவில்லை ...நானாகவே நீ இருக்கிறாய் 

நானிருந்தும் என்னை நினைப்பதில்லை ..ஏனேனில் என்னில்

காற்றாய் ஒலியாய் பார்வையாய் ...எல்லாம் நீயாய் உயிராய்  இருக்கிறாய்.