Monday, February 13, 2023

உணர்வகளும், உணர்ச்சிகளும்

உணர்வகளும், உணர்ச்சிகளும் 

என்னின் ஒரே மாதிரியான உணர்வுகளோ, உணர்ச்சிகளோ மட்டுமே உன்னை  நேசிப்பதாகாது...

உன் எல்லா உணர்வுகளுக்கும்  உணர்ச்சிகளும் மறைந்து இருக்கிறது  என்னுள்ளும் 

ஆச்சரியமும்  இல்லை ஆத்திரமும் இல்லை எப்பவும் கடலில் விழுந்த பெருக்கல் போல தான் என்னுள் நீ புதைந்து இருக்கிறாய். 

உன் உணர்ச்சி ததும்பலும் , முதுமையாகின்ற தோலும் என் கண்களை தாண்டி உளளே செல்வதில்லை.

இதயம் என்னும் மூளைக்குள் முத்தெடுக்கிறாய்.

நீ தொலையாமலே உன்னை தேடுகிறேன் வெளியே !

உணர்வுகளும் உணர்ச்சிகளும் காட்டாமலே உளளே !!