நீ இல்லை என்றால்
நீ இல்லை என்றால் , என்னால் வாழ முடியாது என்று இல்லை. வருத்தங்களும் துன்பங்களும் துரத்தி கொண்டே இருப்பதில்லை. உன்னை போல் 7 பேர்....இந்த உலகில் எங்காவது ஒரு ஊரில் இருப்பார்கள் கண்ணில் படுவார்கள் ...அது போதும் ..உன்னையும் நினைவுகளையும் உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் ..நீ என்பது எனக்கு பிடித்தவை..பிடித்தவள் போனாலும் பிடித்தவை மனசில் இருந்துகொண்டே இருக்கும் ..நீ இல்லை என்றாலும் எனக்கு பிடித்தவை என் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்..நீயும் நினைவுகளும் பட்டு போகாமல் இருந்து கொண்டே இருக்கும் காலம் வரைக்கும்.