பிடித்தல்...வரை!!!
ஆசை, நேசம், அன்பு, காதல் , பரிவு , ரசிப்பு - இவைகள் எல்லாம் ஒன்றை மட்டும் குறிக்கும் சொல் பிடித்தல் ..மனதுக்கு பிடித்து போனால் அவைகள் எப்படி வேணும்னாலும் சொல்லலாம்.
மனதுக்கு இன்னொன்று வேணும்னாமலும் பிடித்து போகலாம், பிடித்தது பிடிக்காமல் போகலாம்... ஆனால் என்ன காரணங்களுக்காக பிடித்தததோ அந்த காரணங்கள் என்றென்றும் மாறாமல் இருக்கும் ..பிடிக்காத காரணங்களை உள்வாங்காமல் இருப்பதும் , பிடித்ததை மட்டும் உள்ளே வைத்து இருப்பதும் மனிதர்களின் தன்மையும் முதிர்ச்சியும் பொறுத்தது.
பிடித்ததவை பசுமரத்தாணி போல, மனிதமும் மனிதனும் பட்டு போனாலும் சரி, உயிர்த்து போனாலும் ..நிலைத்து இருக்கும் உன்னை பிடித்த என் மனசு இருக்கும் வரை!!!