தெரியும் ஆனால் ..தெரியாது !!!
பல விஷயங்கள் சொல்லலாம் உனக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகளை ...
-சிந்தனைகளும் , செயல்களும் ஒன்றாக இருப்பதால்
-உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கு பிடிக்கும் என்பதால்
-எனக்கு பிடித்தவை எல்லாம் உனக்கு பிடிக்கும் என்பதால்
-நீ நினைப்பதல்லாம் நான் பேசுவதால்
-நான் பேசுவதெல்லாம் நீ நினைப்பதால்
-நீ பார்ப்பதெல்லாம் நான் கவனிப்பதால்
-நான் கவனிப்பதெல்லாம் நீ பார்ப்பதால்
நீயாகவே நானாகி போனேன். அதனால் தான்
-எனக்கு தெரியும் ! உன்னுலகத்தில் என் உலகம் இல்லை என்று..
ஆனால் உனக்கு எப்பொதும் தெரியாது!!! - என்னுலகத்தில் தான் உன்னுலகம் அடங்கி இருக்கிறது என்று.