Thursday, July 28, 2022

ஆனந்தம் வந்ததடி உன்னாலே!!!


138 கோடிகளுக்கு மேலான நொடிகள் கடந்து போனது உன்னை பார்க்கும் பொழுது,

இந்த பூமியில் எந்த ஊரில் எந்த இடத்தில இருந்தாயோ..எங்கிருந்து வந்தாயோ.

உன்னை தேடாமல் என் கண்ணுக்கு கிடைத்தாய், 

என்னிடம் சொல்லாமலே இதயத்தில் நுழைந்தாய், 

உன்னை நினைக்காமலே மனம் முழுவதும் குடி கொண்டாய் ..

உன்னை நினைக்கையில், உன்னை பார்க்கையில் அனுதினமும்  உள்ளுக்குள் ஆனந்தம் பொங்குதடி உன்னாலே !!!

Thursday, July 21, 2022

உனக்கு என்ன கைம்மாறு செய்வேன் ?

உன்னை பார்த்ததில் எனக்கு சந்தோசம்

உன்னிடம் பேசியதில் எல்லையில்லா சந்தோசம்

உன்னை நினைக்கையில் பேரானந்தம்  

உன்னிடம் பழகியதில் பூலோக ஆனந்தம் 

உன்னால் மனசும் வயிறும் நிரம்பியதால் பிரபஞ்ச சந்தோசம் 

உன்னால் எனக்கு (மட்டும்) இவ்வளவு சந்தோசம் , ஆனந்தம் நான் பெற்றேன் ..

என்னால் உனக்கு என்ன சந்தோசம்/ஆனந்தம்/பயன்?

உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன். ?

நான் அடைந்த சந்தோசத்தை விட அதிகமான சந்தோசத்தை உனக்கு தருவேன்..இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத அளவுக்கு..

காலம் பதில் சொல்லும்.!!!




Wednesday, July 20, 2022

தெரியும் ஆனால் ..தெரியாது !!!

பல விஷயங்கள் சொல்லலாம் உனக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகளை ...

-சிந்தனைகளும் , செயல்களும் ஒன்றாக இருப்பதால் 

-உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கு பிடிக்கும்  என்பதால் 

-எனக்கு பிடித்தவை எல்லாம் உனக்கு பிடிக்கும் என்பதால் 

-நீ நினைப்பதல்லாம் நான் பேசுவதால் 

-நான் பேசுவதெல்லாம் நீ நினைப்பதால்  

-நீ பார்ப்பதெல்லாம் நான் கவனிப்பதால் 

-நான்  கவனிப்பதெல்லாம் நீ பார்ப்பதால்  

நீயாகவே நானாகி போனேன். அதனால் தான் 

-எனக்கு தெரியும் ! உன்னுலகத்தில் என் உலகம் இல்லை என்று..

ஆனால் உனக்கு எப்பொதும் தெரியாது!!!  - என்னுலகத்தில் தான் உன்னுலகம் அடங்கி இருக்கிறது என்று.

  

Tuesday, July 19, 2022

பிடித்தல்...வரை!!!


ஆசை, நேசம், அன்பு, காதல் , பரிவு , ரசிப்பு - இவைகள் எல்லாம் ஒன்றை மட்டும் குறிக்கும் சொல் பிடித்தல் ..மனதுக்கு பிடித்து போனால் அவைகள் எப்படி வேணும்னாலும் சொல்லலாம்.


மனதுக்கு இன்னொன்று வேணும்னாமலும் பிடித்து போகலாம், பிடித்தது பிடிக்காமல் போகலாம்... ஆனால் என்ன காரணங்களுக்காக பிடித்தததோ அந்த காரணங்கள் என்றென்றும் மாறாமல் இருக்கும் ..பிடிக்காத காரணங்களை உள்வாங்காமல் இருப்பதும் , பிடித்ததை மட்டும் உள்ளே வைத்து இருப்பதும்  மனிதர்களின் தன்மையும் முதிர்ச்சியும் பொறுத்தது.


பிடித்ததவை பசுமரத்தாணி போல, மனிதமும் மனிதனும் பட்டு போனாலும் சரி, உயிர்த்து போனாலும் ..நிலைத்து இருக்கும் உன்னை பிடித்த என் மனசு இருக்கும் வரை!!!


 


Thursday, July 14, 2022

ரசனைக்கு சொந்தக்காரி

ரசனைகளில் நீ பேரரசி 

உனக்கு உலகில் உள்ள அத்தனை ஒப்பனைகளும்  ஒத்து போகிறது 

அழகை தாண்டி நீ அற்பதுமானவள் ...ரசனையானவள் 

பிரம்மன் அழகான பெண்களை படைப்பான்..இல்லை 

அதனை பெண்களையும் அழகாக படைப்பான். 

ஆனா ஒரு சிலர்க்கு மட்டும் வாழ்க்கையின் அத்தனை ரசனையையும் , அதை அனுபவிக்கும் தகுதியும் வாய்ப்பும் தருவான். 

நீ பிரம்மனையே படைத்தவள் ..

நீ பிரபஞ்சத்தையும் படைத்தவள் ..

உன் ஒப்பனைகள் எவ்வளவு அழகானதும் , ரசிக்கும்தன்மையும் உள்ளது என்றும் நீ தான் அவைகளுக்கு சொந்தக்காரி என்பதும் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் 


Wednesday, July 13, 2022

மறந்தேன் ..தவறு !


ஒவ்வொரு நொடிக்கும் ..துடிக்கும் இதயத்தை மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..உள்வாங்கும் மூச்சையும் மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..என் எதிரில் நீ இல்லாமல் இருக்கும் போது  , என் பார்வையில் பட்டதெல்லாம் மறந்தேன்  

ஒவ்வொரு நொடிக்கும் ..உன் நினைவை தவிர , மற்ற எல்லா நினைவுகளையும் மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..உன் குரலே காதில் ஒலிப்பதால் ,என்னை சுற்றி எழும் சத்தத்தை மறந்தேன்

 ....

...

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் மறந்தேன் என்பது தவறு. ..பிரபஞ்சமே நீ என ..என் பார்வையில் , என் பேச்சில், என் நினைவில் -  நான் இருப்பது தான் சரி.


Tuesday, July 12, 2022

சந்தோசம்


வாழ்க்கையில் எல்லாம் கடந்து போகும் என்று தெரியும்

வாழ்க்கையே கடந்து போகும் என்பதும் அவ்வப்போது ஞாபகம் வரும்.

நீ வந்தது போக அல்ல. 

உன்னை நான் கடந்து போகவும் அல்ல.

நீயாகவே நானான போது, என்னை தொலைத்து உன்னை கண்ட எனக்கு ரொம்ப சந்தோசம் தான் 

Monday, July 11, 2022

ஒரு சிலர்க்கு மட்டுமே .

நினைப்பெதெல்லாம் பார்ப்பதில்லை 

பார்ப்பதெல்லாம் நினைத்ததுமில்லை 

பார்க்கும் போது நினைப்பதுமும் 

நினைக்கும் போதும் பார்ப்பதும் 

நீ மட்டுமே!!!

ஒரு சில சமயம் - நினைக்கும் போதும் பார்க்கும் போதும் பேசும் போதும் - ஒன்றாய் இருப்பது நீ மட்டுமே.

ஒரு சில நொடிகள் என்றாலும் ஒரு யுகமே கடந்து செல்கிறது 

.இது அரிது. அதிசயம்.. 

இந்த அனுபவம் எல்லோருக்கும்  கிடைப்பதில்லை ...

பிடித்தவை அருகில்.

பிடித்தவை அருகில் மனதிற்கு அருகில்.

உன்னை போல் ஏழு பேரு ..இல்லை உன்னையும் சேர்த்து ஏழு பேரு.

நீ தான் ஏழாவது .......அதிசியம்..!!. 

உன்னை போல மீண்டும் ஒருவரை பார்க்க வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் ஒரு கால கட்டத்திற்கு அப்பால் புதிதாக மனசுக்கு பிடிக்க எதுவும் இல்லை.

ஒரு வேலை உன்னை பார்க்காமல் இருந்து இருந்தால் ...அந்த காலம் எப்போவது வரும்.

எப்படியோ பார்த்தது ...மீண்டும் பார்ப்பேனா ..என்பது போயி , மீண்டும் பேசுவானா..என்பது போயி ..அருகிலே வந்து விட்டாய் ..என் மனதருகிலே வந்துவிட்டாய்...ஆனால் மனதோ என்னிடம் இல்லை !!!


 

Thursday, July 7, 2022

உயிரானவள் !!!

என் மனதுக்குள் இருக்கும் பட்டு போன காதலுக்கு உயிர் கொடுத்தது உன் முகம் 

கடந்து போன காதலும் விட்டு போன, விட்டு வந்த காதலும் அனைத்தையும் ஒன்று சேர்ந்து இருந்த ஒட்டுமொத்த மறதிகளுக்கும் நினைவூட்டியது உன் முகம் 

இதனை நாளா நான் பார்க்காமல் இருந்தது துரதிஷ்டம் ..இனி நீ காற்றாய் , சத்தமாய் இயங்கி கொண்டே இருப்பாய் என் உடம்பில் ..என் மனசு உயிரோட்டமாய் இருக்கும் உன் முகம் நினைவில் உள்ளவரை இனி பார்த்தாலும் பார்க்க விட்டாலும்.!!!

Monday, July 4, 2022

நீ இல்லை என்றால்

நீ இல்லை என்றால் , என்னால் வாழ முடியாது என்று இல்லை. வருத்தங்களும் துன்பங்களும் துரத்தி கொண்டே இருப்பதில்லை. உன்னை போல் 7  பேர்....இந்த உலகில் எங்காவது ஒரு ஊரில் இருப்பார்கள் கண்ணில் படுவார்கள் ...அது போதும் ..உன்னையும் நினைவுகளையும் உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் ..நீ என்பது எனக்கு பிடித்தவை..பிடித்தவள் போனாலும் பிடித்தவை மனசில் இருந்துகொண்டே இருக்கும் ..நீ இல்லை என்றாலும் எனக்கு பிடித்தவை என் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்..நீயும் நினைவுகளும் பட்டு போகாமல் இருந்து கொண்டே இருக்கும் காலம் வரைக்கும். 


Friday, July 1, 2022

வேரெதுவும் இல்லை

பார்ப்பது எதுவாக இருந்தாலும் கண்ணுக்குள் நீ மட்டுமே தெரிகிறாய்

கேட்பது எதுவாக இருந்தாலும் காதுக்கு உன் குரல் மட்டுமே ஒலிக்கிறது 

பேசுவது எதுவாக இருந்தாலும் மனதுக்குள் உன் பேரை மட்டுமே உச்சரிக்கிறது 

நினைப்பது மட்டும் வேரெதுவும் இல்லை உன்னை தவிர...