Monday, August 29, 2022

கடந்து போகமுடியுமா?


தெரிந்தவரை இவ்வுலகில் எல்லாம் கடந்து போகும். 

உன்னை மட்டும் நான் கடந்து போவேனோ? 

பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் 

பேசினாலும் பேசாவிட்டாலும் 

இதயத்துக்குள் ஓடும் இரத்தம் போல 

மூளைக்குள் உன்னை பற்றிய நினைப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும்

என்னுள் நீ இருக்கும் வரை ,நான் ஒரு போதும் உன்னை கடந்து செல்வதில்லை.

நொடியேனும் மறந்தும் இருந்ததில்லை ....நீ என் கண்களில் இருந்து மறைந்ததும் இல்லை. பிறகு எப்படி கடந்து போக முடியும்? 

Friday, August 5, 2022

உனக்காகவே வாழ்கிறேனா?

 உனக்காகவே வாழ்கிறேனா? இல்லை.. 

எனக்காகவே வாழ்கிறேன்...நீ அருகில்   இல்லை என்ற போதிலும் , 

உன்னால் என் இதயம் துடிக்கிறது. 

உன்னால் என் சிந்தனை உதிக்கிறது 

உன்னால் சந்தோசம் கிடைக்கிறது

உன்னால் நிம்மதி கிடக்கிறது

இது எல்லாம் கிடைக்க காசு பணம் தேவையில்லை. என் மனதில் இருக்கும் உன் முகமும் , என் காதில் ஒலிக்கும் உன் பேருமே போதும்.

என்னுள் நீ இல்லாமல் நானில்லை, நானின்றி என்னுள் நீ இல்லை. 

உனக்காக வாழவில்லை. 

உண்மை தான் .. எனக்காக மட்டுமே வாழ்கிறேன்...

ஏனெனில் என்னில் நீ அழியா பொக்கிஷமாய் !!!!

Wednesday, August 3, 2022

சொந்தம் இல்லை தான் ...ஆனாலும் !


பார்க்காத பொழுதுகள் ஒவ்வொரு நொடிகளாக முடிகிறது..அத்தனை நொடிகளும் உன்னையே சுமந்து , கடந்து செல்கிறது. 

 உன்னை பார்க்கும் நொடிகள் ஒவ்வொரு யுகமாக கழிகிறது ..ஒவ்வொரு யுகத்திலும் நீயே குடிகொண்டு , என்னை ஆட்கொண்டு போகிறாய்

உன் பேச்சின் ஒலிகள் , இந்த பிரபஞ்சத்த்தில் ஓம் என்ற ஒலியாய் என் காதுகள் கேட்டு கொண்டே இருக்கிறது. 

என் கண்ணில் , என்னுள் பதிந்த உன் முகம், என் காதில் விழுந்த உன் வார்த்தைகள், என் மூளையில் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும் உன் செயல்கள், , அத்தனையும் எனக்கு சொந்தம், எனக்கு மட்டுமே சொந்தம்.  அதுவே ஏழேழு ஜென்மத்திற்கும் போதும். !

நீ எனக்கு சொந்தம் இல்லை என்ற போதிலும். அதற்காக வருத்தமோ , துன்பமோ இல்லை. 

உன்னால்  எனக்கு கிடைக்கும் சந்தோசத்தை, நிம்மதியை தவிர வேற என்ன வேண்டும் இந்த பூவுலகில்?

Thursday, July 28, 2022

ஆனந்தம் வந்ததடி உன்னாலே!!!


138 கோடிகளுக்கு மேலான நொடிகள் கடந்து போனது உன்னை பார்க்கும் பொழுது,

இந்த பூமியில் எந்த ஊரில் எந்த இடத்தில இருந்தாயோ..எங்கிருந்து வந்தாயோ.

உன்னை தேடாமல் என் கண்ணுக்கு கிடைத்தாய், 

என்னிடம் சொல்லாமலே இதயத்தில் நுழைந்தாய், 

உன்னை நினைக்காமலே மனம் முழுவதும் குடி கொண்டாய் ..

உன்னை நினைக்கையில், உன்னை பார்க்கையில் அனுதினமும்  உள்ளுக்குள் ஆனந்தம் பொங்குதடி உன்னாலே !!!

Thursday, July 21, 2022

உனக்கு என்ன கைம்மாறு செய்வேன் ?

உன்னை பார்த்ததில் எனக்கு சந்தோசம்

உன்னிடம் பேசியதில் எல்லையில்லா சந்தோசம்

உன்னை நினைக்கையில் பேரானந்தம்  

உன்னிடம் பழகியதில் பூலோக ஆனந்தம் 

உன்னால் மனசும் வயிறும் நிரம்பியதால் பிரபஞ்ச சந்தோசம் 

உன்னால் எனக்கு (மட்டும்) இவ்வளவு சந்தோசம் , ஆனந்தம் நான் பெற்றேன் ..

என்னால் உனக்கு என்ன சந்தோசம்/ஆனந்தம்/பயன்?

உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன். ?

நான் அடைந்த சந்தோசத்தை விட அதிகமான சந்தோசத்தை உனக்கு தருவேன்..இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத அளவுக்கு..

காலம் பதில் சொல்லும்.!!!




Wednesday, July 20, 2022

தெரியும் ஆனால் ..தெரியாது !!!

பல விஷயங்கள் சொல்லலாம் உனக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகளை ...

-சிந்தனைகளும் , செயல்களும் ஒன்றாக இருப்பதால் 

-உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கு பிடிக்கும்  என்பதால் 

-எனக்கு பிடித்தவை எல்லாம் உனக்கு பிடிக்கும் என்பதால் 

-நீ நினைப்பதல்லாம் நான் பேசுவதால் 

-நான் பேசுவதெல்லாம் நீ நினைப்பதால்  

-நீ பார்ப்பதெல்லாம் நான் கவனிப்பதால் 

-நான்  கவனிப்பதெல்லாம் நீ பார்ப்பதால்  

நீயாகவே நானாகி போனேன். அதனால் தான் 

-எனக்கு தெரியும் ! உன்னுலகத்தில் என் உலகம் இல்லை என்று..

ஆனால் உனக்கு எப்பொதும் தெரியாது!!!  - என்னுலகத்தில் தான் உன்னுலகம் அடங்கி இருக்கிறது என்று.

  

Tuesday, July 19, 2022

பிடித்தல்...வரை!!!


ஆசை, நேசம், அன்பு, காதல் , பரிவு , ரசிப்பு - இவைகள் எல்லாம் ஒன்றை மட்டும் குறிக்கும் சொல் பிடித்தல் ..மனதுக்கு பிடித்து போனால் அவைகள் எப்படி வேணும்னாலும் சொல்லலாம்.


மனதுக்கு இன்னொன்று வேணும்னாமலும் பிடித்து போகலாம், பிடித்தது பிடிக்காமல் போகலாம்... ஆனால் என்ன காரணங்களுக்காக பிடித்தததோ அந்த காரணங்கள் என்றென்றும் மாறாமல் இருக்கும் ..பிடிக்காத காரணங்களை உள்வாங்காமல் இருப்பதும் , பிடித்ததை மட்டும் உள்ளே வைத்து இருப்பதும்  மனிதர்களின் தன்மையும் முதிர்ச்சியும் பொறுத்தது.


பிடித்ததவை பசுமரத்தாணி போல, மனிதமும் மனிதனும் பட்டு போனாலும் சரி, உயிர்த்து போனாலும் ..நிலைத்து இருக்கும் உன்னை பிடித்த என் மனசு இருக்கும் வரை!!!