உயிரானவள்...
அத்தனை நட்சத்திரங்களும் சேர்ந்தாலும் உன்னால் என்னுள் ஏற்படும் வெளிச்சம் பல பிரபஞ்சகளை தாண்டியும் ஒளிரும்
ஆயிரம் வெற்றிகள் பெற்றாலும் கிடைக்காத ஆனந்தம் உன்னை பார்க்கும் போது ஏற்படும் பேரானந்தம்
மலையையும் மழையையும் , மண்ணையும் , மரங்களையும் , மலர்களையும் பார்க்கும் போது வாராத ஆனந்தம் உன்னை பார்க்கும் போது வருகிறது பேரானந்தம்
கடந்த போன கோடிக்கணக்கான ஆண்டுகளோ இல்லை இன்னும் கணக்கில் எண்ணமுடியாது முடிவில்லா ஆண்டுகளோ அத்தனை காலத்திற்கும் நீயே வியாபித்து இருப்பாய் .
தாங்க முடியாத சோதனைகள் வந்தாலும் , நீ நினைவில் வரும் போது அத்தனையும் காணாமல் போகும்
நினைவிலும், பேச்சிலும், பார்வையிலும் இரத்ததிலும் உயிரானவள்
பல பிரபஞ்சம்களுக்கு தாயுமானவள்...
என்னை மீட்டு மீண்டும் உயிர் கொடுத்தவள் .
.என் உயிரானவள்.