Thursday, March 22, 2007

என் காதலி

எத்தனையோ நிகழ்வுகளை கண்டு நான்
இது தான் வாழ்க்கை, இது தான் உலகம் என்று இருந்தேன்
உன்னை
முதலா முதலா பார்க்கும் வரை, நினைக்கும் வரை.
அதற்கு பிறகும்
எத்தனையோ நிகழ்வுகளை கண்டு கொண்டு இருக்கிற நான்,...
இன்னமும்
என் உலகமாய்
என் வாழ்க்கையாய்
நீயே
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாய்!