எப்பொழுது தோன்றியது?
என்னில் கவிதை தோன்றியது எப்போது?
என்னில் சிந்தனை தோன்றியது எப்போது?
நீ என் கண்ணெதிரே தோன்றிய போதா?
என் கேள்வி கவிதைக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
இல்லை
உனக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
எனக்கென்னவோ சிந்தித்தது கவிதைக்காகவே என்று தோன்றினாலும்,
உன்னை பார்த்த பிறகு;
உன்னால் என்னை மறந்த பொழுது தோன்றியதே என் மனதில்,
கவிதையும் சரி,
சிந்தனையும் சரி.