Saturday, March 24, 2007

முகவரி கொடுத்தவளே

உலகிற்கு என் முகவரியை கொடுத்துவர்கள் என் பெற்றோர்கள்
எனது உண்மைகளை தெரிந்து கொண்டார்கள்...!

உன்னால் என் மனதிற்கு முகவரியை கொடுத்தவள் நீ
எனது உனர்வுகளை தெரிந்து கொண்டேன்...!

உன்னை தெரிந்து கொள்ள
என்னை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை அறிந்து கொள்ள
என்னை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை புரிந்து கொள்ள
என்னை இழக்க வேண்டி இருக்கிறது...!

உலகுக்கு இறுதியில் 'சுடுகாடு' தான் என் முகவரி உணர்த்தி விட்டாய்
உன் முகவரிய நான் அடையும் முன்பே...!