சுயசிந்தனை பயம்
வெளிபடையாக என் சுய சிந்தனை எத்தனையோ தடவை
என் மனதின் எண்ணங்களை திசை திருப்ப முயற்சி செய்து இருக்கிறது
உன்னை நினைக்கும் போதெல்லம்.
உன்னை நினைக்காத போது நான் புரிந்து கொண்டது ஏதெனில்
என் சுய சிந்ததனையே உன்னை நினைக்கவே மறுபடியும் தோன்றுகிறது.
நான் யோசித்தவைகளிலே, நினைத்தவைகளிலே நீ மட்டுமே முதன்மையாக இருக்கிறாய்.
என்னை பற்றி நினைக்கும் பொது எல்லாம் கூட
அது உன்னக்ககாவே நினைக்க தோன்றுகிறது.
இன்னமும் என்னிடம் நீ சேரவில்லை,பரவாயில்லை
என் சுயசிந்தனை பறிக்க முயலாதே என் கண்ணில் பட்டு.
எனக்கு என்னமோ பயமாக இருக்கிறது
என் சுயசிந்தனை நீயாகவே மாறிவிடுமோ என்று.