அனைத்துமாகி போனேன் !
அனைத்துமாகி போனேன் !!!
நீ இருந்த இடத்தில நானும் இருந்தேன்
நீ உறங்கிய தூக்கத்தில் நான் கண்மூடினேன்
நீ விட்ட சுவாசத்தில் நான் உயிர் மூச்சு இழுத்தேன்
நீ உண்ண உணவில் நான் பசியாறினேன்
நீ பேசிய பேச்சில் என் இதயம் மவுன கீதம் வாசித்தது
நீ வாழ்த்தியதில் கடவுளிடம் இருந்து கருணை கிடைத்தது
நீ பார்த்ததில் என் கண்கள் விடியலை பெற்றது
நீ விட்டு போன நிழலில் நான் நிசமானேன்
அணைத்தும் அணையாமல் இருந்தது விளக்கு
இருளிலா பிரபஞ்சத்தை கண்டேன் அன்று உன்னாலே
பிரபஞ்சித்தில் அனைத்துமாகி போனேன்