எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!
எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!
தாங்கவே முடியாத சந்தோசத்தை தருபவளாக நீ
தாங்கவே முடியாத சோகத்தை தருபவளாக நீ..
அதனால் தான் என்னவோ,
வேறு எந்த சந்தோஷத்தையும்,
வேறு எந்த சோகத்தையும் என்னால் எளிதில் கடந்து போக முடிகிறது..
ஆரம்பமும் முடிவும் யார் ஒருவற்கும் தெரியாத இந்த பிரபஞ்சத்தில்
உன்னை நினைக்கையில் பிரபஞ்சத்தின் ஆரம்பமாகி தோன்றுகிறாய்
உன்னை மறக்கையில் முடிவே இல்லாத பிரபஞ்சமாக வியாபிக்கிறாய்
நீ அருகில் எப்பவும் இல்லை என்றாலும், எப்பவும் என் கண்ணாய், என் இதையமாய் இருக்கிறாய்..
நீ இருக்கிறாய் என்பதால் இந்த பூமி என்னை தாங்கி கொள்கிறது
உன்னை நினைப்பதால் இந்த மனசு எதையும் தாங்கி கொள்ள முடிகிறது.