Wednesday, December 4, 2024

அனைத்துமாகி போனேன் !

அனைத்துமாகி போனேன் !!!

நீ இருந்த இடத்தில நானும் இருந்தேன் 

நீ உறங்கிய தூக்கத்தில் நான் கண்மூடினேன் 

நீ விட்ட சுவாசத்தில் நான் உயிர் மூச்சு இழுத்தேன் 

நீ உண்ண உணவில் நான் பசியாறினேன் 

நீ பேசிய பேச்சில் என் இதயம் மவுன கீதம் வாசித்தது 

நீ வாழ்த்தியதில் கடவுளிடம் இருந்து கருணை கிடைத்தது

நீ பார்த்ததில் என் கண்கள் விடியலை பெற்றது 

நீ விட்டு போன நிழலில் நான் நிசமானேன் 

அணைத்தும் அணையாமல் இருந்தது  விளக்கு 

இருளிலா பிரபஞ்சத்தை கண்டேன் அன்று  உன்னாலே 

பிரபஞ்சித்தில் அனைத்துமாகி போனேன் 





Tuesday, August 27, 2024

வேற என்ன வேணும்.?


உன்னை நினைத்தாலே ஆனந்தம்..

பார்த்தாலே பேரானந்தம்..

நினைத்தது நடந்தாலே ஆச்சரியம் ..இன்னும் ஒருபடி போய் நினைக்காதும் நடந்தால் பேரதிசயம் ...

நீ இல்லாத போது நாட்கள் எல்லாம் நிமிடங்களாகின ..

நீ அருகில் இருக்கும் போது நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜென்மகளாகின...வாழும் போதே பல ஜென்மங்களை கண்டேன்..உன்னாலே..

வேற என்ன வேணும் இன்னும்...உன்னாலே..!!!


Friday, May 17, 2024

எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!

 எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!


தாங்கவே முடியாத சந்தோசத்தை தருபவளாக நீ

தாங்கவே முடியாத சோகத்தை தருபவளாக நீ..

அதனால் தான் என்னவோ, 

வேறு எந்த சந்தோஷத்தையும், 

வேறு எந்த சோகத்தையும் என்னால் எளிதில் கடந்து போக முடிகிறது..

ஆரம்பமும் முடிவும் யார் ஒருவற்கும் தெரியாத இந்த பிரபஞ்சத்தில் 

உன்னை நினைக்கையில்  பிரபஞ்சத்தின் ஆரம்பமாகி தோன்றுகிறாய் 

உன்னை மறக்கையில்  முடிவே இல்லாத பிரபஞ்சமாக வியாபிக்கிறாய்

நீ அருகில் எப்பவும் இல்லை என்றாலும், எப்பவும் என் கண்ணாய், என்  இதையமாய் இருக்கிறாய்..

நீ இருக்கிறாய் என்பதால் இந்த பூமி என்னை தாங்கி கொள்கிறது

உன்னை நினைப்பதால் இந்த மனசு எதையும் தாங்கி கொள்ள முடிகிறது. 



 




Sunday, May 12, 2024

பேரதியசமாய் நீ !!!


வாழ்க்கையில்  சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும் 

நினைத்த பார்த்தது மட்டுமல்ல , நினைத்து பார்க்காதும் கூட நடக்கும் போது  அவைகள் அதிசயமாகிறது 

கற்பனைகள் கனவாகும் போதும் , கனவுகள் நிஜமாகும் போதும், அவைகள் அதிசயமாகிறது 

ஒரே நேரத்தில் பல அதிசயங்கள் நடக்கும் போது , அவைகள் எல்லாம் பேரதியசங்களாகிறது 

பிரபஞ்சங்களில்  எப்பவாது நிகழ்வது மட்டும் அதிசயங்கள் அல்ல ...

மனசுக்குள் இருப்பவைகள் ஒரு சில  கண் எதிரே நடக்கும் போது அவைகளும் பேரதியசங்களாகிறது  

எண்ணங்கள் சில ஜனனமாகும் போது , நொடிகள் கூட யுகமாகிறது ...

யுகமும் மறு  ஜென்மம் எடுக்கும் அதிசயம் உன்னாலே நடந்தது .!!!

ஒவ்வொரு ஜென்மத்திலும் அதிசயமானவளே நீ ..என்னுள் எப்போதும் பேரதியசமாய் !!!



Thursday, April 25, 2024

ஒவ்வொரு இதைய துடிப்பின் போதும்!!!

உன்னை நினைக்கையில் என்னை மறந்தேன் 

ஒரு நாளாவது உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசை இல்லை

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உன்னை பார்க்க வேண்டும் தோன வில்லை 

மனதுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் யுகமாய் இருக்கிறாய்,

இதயத்துள் பிரபஞ்சமாய் பரந்து இருக்கிறாய் 

உன்னை பார்க்கையில் நான் மறத்து போனாலும் மறந்து போவேனா..

அளவே இல்லாத ஆனந்த்தில் உன்னை நினைக்கும் போது எல்லாம் ..ஒவ்வொரு இதைய துடிப்பின் போதும் ...