Tuesday, June 28, 2022

அதுவா ..நடக்கும்..


ஓராயிரம் நாட்கள் விலகி இருந்தாலும், ஈராயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்தாலும்...இதயத்தில் ஓடும் இரத்தம் போல உன்னை பற்றிய நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும். 

ஒரே பார்வையிலும் , ஒரே வார்த்தையிலும் அனைத்து சிந்தனைகளும் பரிமாறி இருக்கும் நம் மனதுக்குள். காலமும் விதியும் நம்மை எங்கு இருந்தாலும் மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கும்..அதுவா நடக்கும்..அது தான் உண்மையான நேசிப்பு. 

Monday, June 27, 2022

அதிசயமும் அதிர்ஷ்டமும்

 அதிசயமும் அதிர்ஷ்டமும் 


வாழ்க்கையில் எப்பாவது அதிசயமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். அது அடிக்கடி நிகழ்வதெல்லாம் பேரதிசயம் பேரதிஷ்டம் ...அப்படி என்ன அது?


நீ யாரோ நான் யாரோ ..ஆனால் உன்னை பார்ப்பதும் உன்னிடம் பேசுவதும் இதை தவிர வேற என்ன இருக்க முடியும். இது கடந்து போன அத்தனை  ஜென்மங்களிலும்   நான் செய்த புண்ணியம் ....

Saturday, June 25, 2022

பார்த்தாலே போதும்.

உன்னை பார்க்கும் போது என்னுள் பட்டாம் பூச்சி பறப்பதில்லை, நெஞ்சம் பதைப்பதில்லை . மாறாக   உன்னை பார்த்தது. ,மனதுக்குள் அவ்வளவு சந்தோசம் ..நிம்மதி ..அந்த ஒரு சில வினாடிகள். இது இந்த ஜென்மத்தின் பேரதிஷ்டம்.. .நீ மட்டும் சொர்க்கம் இல்லை நீ இருக்கும் இடமும் சொர்க்கம் தான். கணக்கில் அடங்கா ஜென்மத்திலும் உன்னை பார்க்கும் வரம் வேண்டும்..பேரதிஷடம் வேண்டும் .

Tuesday, June 7, 2022

எல்லையில்லா ஆனந்தம்!!

உன்னை நினைப்பது ஆனந்தம் 


உன்னை பார்ப்பது பேரானந்தம் 


 உன்னிடம் பேசுவது ஏழு ஜென்மங்கள் பிறவி பலன் 


மொத்தத்தில் என் மனதுக்கு பிடித்தவளாக இருப்பது நான் போன ஜென்மத்தில் 

 செய்த புண்ணியம்.


என்னை நேசிப்பதை விட உன்னை நேசிப்பது மனதுக்குள் கணக்கில் அடங்கா சந்தோசம் 

Sunday, June 5, 2022

இதயம்

 என் இதயத்தில் எத்தனையோ பேர் வந்து போலாம் அவர்கள் நினைவுகள் அவ்வப்போது வந்து போகும். சந்தோசம் ஏக்கமும் வந்து வந்து போகும். ஆனால் நீ மட்டும் அத்தனையும் தாண்டி , அனைத்தயும் தாங்கி நிற்கும் இதயமாகவே இருக்கிறாய்