Wednesday, November 9, 2022

வரமாக நீ வேண்டும்


எப்பொழுதும் மனதில் இருப்பவை கண் முன்னாடி கண்ணாடி பிம்பமாக தெரிந்து கொண்டே இருக்கும். அது ஒரு மாயை.


எப்பொழுதாவது உன்னை நேரில் பார்க்க அவவப்போது எனக்கு வரம் வேண்டும். என் கண்ணனுக்கு முன்னாடி நீ பட்டால், புதிய முகம் புதிய அனுபவம் மனதில் சேர்ந்து கொண்டே இருக்கும். அது ஒரு மனதுக்கு புது பொழிவு ..


நினைக்கும் போதெல்லாம் உன்னை பார்க்கும் வரம் வேண்டும்.

மனமெல்லாம் உன் நினைவே இருக்கும் வரம் வேண்டும் 

உன் நினைவாகவே நான் இருக்க வரம் வேண்டும் 

நீயாகவே நான் இருக்க வரம் வேண்டும் 

எல்லா வரமாகவே நீ இருக்க வேண்டும். 

நீயே வரமாக வேண்டும் !!

Monday, October 3, 2022

பிரபஞ்சமானவள் அல்ல..!!!

மனசுக்குள் நீ இல்லை மனசாகவே இருக்கிறாய் 

கண்ணுக்குள் நீ தெரிவதில்லை என் கண்ணாகவே இருக்கிறாய்

பேச்சினில் உன்னை பற்றி வார்த்தைகள் இல்லை ..

பேசும் ஒலிகள் எல்லாம் உன்னையே உச்சரிக்கின்ற்ன 

ஐம்பூதங்கள் தாண்டி நீ பல அற்பதங்களை கொண்டவள் 

பிரபஞ்சத்துக்குள் என்ன என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது..

மனதுக்குள் ஓராயிரம் பிரபஞ்சங்கள் ...

அந்த பிரபஞ்சகளுக்கு உயிர் கொடுத்து உருவாக்கியவள் ..

நீ பிரபஞ்சமானவள் இல்லை ...

கணக்கில் அடங்கா பிரபஞ்சகளை உள்ளடக்கியவள் ...படைத்தவள்  நீ...!!!


Monday, August 29, 2022

கடந்து போகமுடியுமா?


தெரிந்தவரை இவ்வுலகில் எல்லாம் கடந்து போகும். 

உன்னை மட்டும் நான் கடந்து போவேனோ? 

பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் 

பேசினாலும் பேசாவிட்டாலும் 

இதயத்துக்குள் ஓடும் இரத்தம் போல 

மூளைக்குள் உன்னை பற்றிய நினைப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும்

என்னுள் நீ இருக்கும் வரை ,நான் ஒரு போதும் உன்னை கடந்து செல்வதில்லை.

நொடியேனும் மறந்தும் இருந்ததில்லை ....நீ என் கண்களில் இருந்து மறைந்ததும் இல்லை. பிறகு எப்படி கடந்து போக முடியும்? 

Friday, August 5, 2022

உனக்காகவே வாழ்கிறேனா?

 உனக்காகவே வாழ்கிறேனா? இல்லை.. 

எனக்காகவே வாழ்கிறேன்...நீ அருகில்   இல்லை என்ற போதிலும் , 

உன்னால் என் இதயம் துடிக்கிறது. 

உன்னால் என் சிந்தனை உதிக்கிறது 

உன்னால் சந்தோசம் கிடைக்கிறது

உன்னால் நிம்மதி கிடக்கிறது

இது எல்லாம் கிடைக்க காசு பணம் தேவையில்லை. என் மனதில் இருக்கும் உன் முகமும் , என் காதில் ஒலிக்கும் உன் பேருமே போதும்.

என்னுள் நீ இல்லாமல் நானில்லை, நானின்றி என்னுள் நீ இல்லை. 

உனக்காக வாழவில்லை. 

உண்மை தான் .. எனக்காக மட்டுமே வாழ்கிறேன்...

ஏனெனில் என்னில் நீ அழியா பொக்கிஷமாய் !!!!

Wednesday, August 3, 2022

சொந்தம் இல்லை தான் ...ஆனாலும் !


பார்க்காத பொழுதுகள் ஒவ்வொரு நொடிகளாக முடிகிறது..அத்தனை நொடிகளும் உன்னையே சுமந்து , கடந்து செல்கிறது. 

 உன்னை பார்க்கும் நொடிகள் ஒவ்வொரு யுகமாக கழிகிறது ..ஒவ்வொரு யுகத்திலும் நீயே குடிகொண்டு , என்னை ஆட்கொண்டு போகிறாய்

உன் பேச்சின் ஒலிகள் , இந்த பிரபஞ்சத்த்தில் ஓம் என்ற ஒலியாய் என் காதுகள் கேட்டு கொண்டே இருக்கிறது. 

என் கண்ணில் , என்னுள் பதிந்த உன் முகம், என் காதில் விழுந்த உன் வார்த்தைகள், என் மூளையில் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும் உன் செயல்கள், , அத்தனையும் எனக்கு சொந்தம், எனக்கு மட்டுமே சொந்தம்.  அதுவே ஏழேழு ஜென்மத்திற்கும் போதும். !

நீ எனக்கு சொந்தம் இல்லை என்ற போதிலும். அதற்காக வருத்தமோ , துன்பமோ இல்லை. 

உன்னால்  எனக்கு கிடைக்கும் சந்தோசத்தை, நிம்மதியை தவிர வேற என்ன வேண்டும் இந்த பூவுலகில்?

Thursday, July 28, 2022

ஆனந்தம் வந்ததடி உன்னாலே!!!


138 கோடிகளுக்கு மேலான நொடிகள் கடந்து போனது உன்னை பார்க்கும் பொழுது,

இந்த பூமியில் எந்த ஊரில் எந்த இடத்தில இருந்தாயோ..எங்கிருந்து வந்தாயோ.

உன்னை தேடாமல் என் கண்ணுக்கு கிடைத்தாய், 

என்னிடம் சொல்லாமலே இதயத்தில் நுழைந்தாய், 

உன்னை நினைக்காமலே மனம் முழுவதும் குடி கொண்டாய் ..

உன்னை நினைக்கையில், உன்னை பார்க்கையில் அனுதினமும்  உள்ளுக்குள் ஆனந்தம் பொங்குதடி உன்னாலே !!!

Thursday, July 21, 2022

உனக்கு என்ன கைம்மாறு செய்வேன் ?

உன்னை பார்த்ததில் எனக்கு சந்தோசம்

உன்னிடம் பேசியதில் எல்லையில்லா சந்தோசம்

உன்னை நினைக்கையில் பேரானந்தம்  

உன்னிடம் பழகியதில் பூலோக ஆனந்தம் 

உன்னால் மனசும் வயிறும் நிரம்பியதால் பிரபஞ்ச சந்தோசம் 

உன்னால் எனக்கு (மட்டும்) இவ்வளவு சந்தோசம் , ஆனந்தம் நான் பெற்றேன் ..

என்னால் உனக்கு என்ன சந்தோசம்/ஆனந்தம்/பயன்?

உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன். ?

நான் அடைந்த சந்தோசத்தை விட அதிகமான சந்தோசத்தை உனக்கு தருவேன்..இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத அளவுக்கு..

காலம் பதில் சொல்லும்.!!!