Friday, May 17, 2024

எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!

 எதையும் தாங்கமுடியும் ...உன்னாலே !!!


தாங்கவே முடியாத சந்தோசத்தை தருபவளாக நீ

தாங்கவே முடியாத சோகத்தை தருபவளாக நீ..

அதனால் தான் என்னவோ, 

வேறு எந்த சந்தோஷத்தையும், 

வேறு எந்த சோகத்தையும் என்னால் எளிதில் கடந்து போக முடிகிறது..

ஆரம்பமும் முடிவும் யார் ஒருவற்கும் தெரியாத இந்த பிரபஞ்சத்தில் 

உன்னை நினைக்கையில்  பிரபஞ்சத்தின் ஆரம்பமாகி தோன்றுகிறாய் 

உன்னை மறக்கையில்  முடிவே இல்லாத பிரபஞ்சமாக வியாபிக்கிறாய்

நீ அருகில் எப்பவும் இல்லை என்றாலும், எப்பவும் என் கண்ணாய், என்  இதையமாய் இருக்கிறாய்..

நீ இருக்கிறாய் என்பதால் இந்த பூமி என்னை தாங்கி கொள்கிறது

உன்னை நினைப்பதால் இந்த மனசு எதையும் தாங்கி கொள்ள முடிகிறது. 



 




Sunday, May 12, 2024

பேரதியசமாய் நீ !!!


வாழ்க்கையில்  சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும் 

நினைத்த பார்த்தது மட்டுமல்ல , நினைத்து பார்க்காதும் கூட நடக்கும் போது  அவைகள் அதிசயமாகிறது 

கற்பனைகள் கனவாகும் போதும் , கனவுகள் நிஜமாகும் போதும், அவைகள் அதிசயமாகிறது 

ஒரே நேரத்தில் பல அதிசயங்கள் நடக்கும் போது , அவைகள் எல்லாம் பேரதியசங்களாகிறது 

பிரபஞ்சங்களில்  எப்பவாது நிகழ்வது மட்டும் அதிசயங்கள் அல்ல ...

மனசுக்குள் இருப்பவைகள் ஒரு சில  கண் எதிரே நடக்கும் போது அவைகளும் பேரதியசங்களாகிறது  

எண்ணங்கள் சில ஜனனமாகும் போது , நொடிகள் கூட யுகமாகிறது ...

யுகமும் மறு  ஜென்மம் எடுக்கும் அதிசயம் உன்னாலே நடந்தது .!!!

ஒவ்வொரு ஜென்மத்திலும் அதிசயமானவளே நீ ..என்னுள் எப்போதும் பேரதியசமாய் !!!