கடந்து போகமுடியுமா?
தெரிந்தவரை இவ்வுலகில் எல்லாம் கடந்து போகும்.
உன்னை மட்டும் நான் கடந்து போவேனோ?
பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்
பேசினாலும் பேசாவிட்டாலும்
இதயத்துக்குள் ஓடும் இரத்தம் போல
மூளைக்குள் உன்னை பற்றிய நினைப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும்
என்னுள் நீ இருக்கும் வரை ,நான் ஒரு போதும் உன்னை கடந்து செல்வதில்லை.
நொடியேனும் மறந்தும் இருந்ததில்லை ....நீ என் கண்களில் இருந்து மறைந்ததும் இல்லை. பிறகு எப்படி கடந்து போக முடியும்?