தாங்காது
தாங்க முடியாத துக்கத்தை பார்த்து இருக்கிறேன்
தாங்க முடியாத சந்தோசத்தை உன்னால் மட்டுமே உணர்க்கிறேன் உனது கோபம் உனது சிரிப்பு உனது பேச்சு உனது பார்வை உனது முகபாவனை அனைத்தும் ஒன்றையே தருகிறது
அது மனதுக்குள் எல்லை இல்லா மமகிழ்ச்சி
வாழும் நொடிகள் பூராவும் உன்னோடு பொழுது கழிக்கும் வரம் வேண்டும் ..
இதுவரை யாருக்கும் கிடைக்காத பேரதிஷ்டம் வேண்டும்
நேசிப்பதில் முதன்மையானது பெண்மை.
ரசிப்பதில் முதன்மையானது பெண்மை.
இன்பத்தில் முதன்மையானது பெண்மை.
துன்பத்தில் முதன்மையானது பெண்மை.
மனதை ஆட்கொள்வதில் முதன்மையானது பெண்மை.
மனதை கொல்வதில் முதன்மையானது பெண்மை.
மயக்குவதில் முதன்மையானது பெண்மை
நினைப்பில் முதன்மையானது பெண்மை
நிம்மதியில் முதன்மையானது பெண்மை
எல்லாவற்றிலும் முந்தி கொள்கிறாய் ..
என்னில் தோன்றும் அத்தனை செயல்களும் உனக்கானதே
உன் நினைவின்றி ஒரு போதும் உறங்காது இந்த மனசு
உன்னால் நான் பெரும் சந்தோசம் இந்த மனம் தாங்காது.
நீ தொலைந்து விடு என்னில் ..என்னை தொலைத்து விடு.
தவிக்க விடாதே தாங்காது இந்த இதயம்