Sunday, October 30, 2011

காதல் தான் ஆனால்....

என் காதல் இமயமலையின் உயிரத்தை விட அதிகமனாது தான்
என் காதல் நைல் நதியின் நீளத்தை விட அதிகமனாது தான்
என் காதல் சீன பெருஞ்சுவரின் நீளத்தை விட அதிகமனாது தான்
என் காதல் சீன மக்கள் தொகையை விட அதிகமனாது தான்
என் காதல் ஒரு தாய் தன் மகனின் மீது வைத்த பாசத்தை விட அதிகமனாது தான்...
......
ஆனால் நம் காதல் ? இல்லை உன் காதல்?
எல்லாவற்றையும் என் காதலில், என்னை நான் உயர்த்தி கொண்ட நான்
ஏனோ உன் காதலில் உன்னை அவ்வாறு இருக்க முயற்சிக்கவில்லை.
உலகின் நிலையானவைகளோடு எல்லாம் உன்னையும், நம் காதலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன்
எனக்குள் இருந்த காதல் நம் காதலில் இருக்கும் என்று இருந்தேன்
நம் காதலில் இருக்கும் காதல் உன் காதலிலும் என் மீது இருக்கும் என்று நம்பினேன்.
உடல் இரண்டானாலும் உள்ளம் ஒன்று என்று இருந்தேன்...இல்லை உள்ளமும் இரண்டு என்று நீ நிரூபித்து விட்டாய்...
சந்தோசம் நம் காதலில் என் காதல் கை கூடாவிட்டாலும் உன் காதலிலாவது கை கூடியதே இன்னொருவனுடன்...
புரிந்து கொள்ள நாட்கள் ஆயிற்று.அட, உன் காதலை போல தான் என் காதலும்....நான் தான் நம் காதலை முன்னரே புரியாமல் போனேன்.
தெரிந்து இருந்தால் உனக்கு முன்னரே என் காதலும் கை கூடி இருக்கும் இன்னொருத்தியுடன்..!

அதுவும் காதல் தான் ஆனால்....

Thursday, October 6, 2011

உணர்வே காதல்?

உணர்வு பூர்வமான எண்ணங்களே காதலை வளர்க்கின்றன...
நடந்தவைகளே நினைவாகின்றன..
நினைவுகள் வெற்றியும் தருவதில்லை, தோல்வியும் தருவதில்லை.
சந்தோசமான நினைவுகள் கஷ்டத்தில் வருவதில்லை.
துன்பமான நினைவுகள் சந்தோசத்தில் வருவதில்லை.
ஆனால் காதல் உணர்வுகளுக்கு சந்தோசமும் கஷ்டமும் ஒரு பொருட்டு இல்லை.
காலமும் காதலும் கடந்தாலும் உணர்வுள்ள நினைவுகள் மறந்து விடுவதில்லை.
உணர்வுள்ளவரை நினைவுகள் இருக்கும்...நினைவுகள் இருக்கும் வரை உயிர் இருக்கும்
உயிர் இருக்கும் வரை நம் காதல் இருக்கும். காதல் என்பது நீ அல்ல, நான் அல்ல.
அது ஒரு உணர்வு!!!!....

Saturday, August 6, 2011

கனவாக' நீ

என் வீட்டில் நீ உன் தோழிகளுடன்
என்ன நிகழ்ச்சி என்று ஞாபகம் இல்லை
மாலை நேரம்
சரியான மழை பெய்து கொண்டு இருக்கிறது
உன் மீது ஒரு குழந்தை
நான் குழந்தையை தூக்க முயற்சிக்க, உன் மீது நான் விழ (தவறாமல்)
சிறிது நேரத்தில் உன் முகத்தில் இரத்தம்
உன் தோழிகள் சிரிக்க சொன்னார்கள், அது இரத்தம் இல்லை, வண்ண தூள் என்று
மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சி..காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும்.
-அட என்ன இது 20 வருடங்களுக்கு முன்னால் உண்மையாக நடந்து இருக்க வேண்டியவைகள், 20 வருடங்களுக்கு பின்னரும் தூக்கதில் கனவில்....

'கனவாக' நீ

Sunday, June 12, 2011

புது கனவு வேண்டும் தோழி

என்னைப் பற்றி நான் நினைத்தை விட
உன்னை பார்த்த நேரங்களை விட
உன்னைப் பற்றி நான் கண்ட கனவுகளின் நேரம் தான் அதிகம்
கனவுகளில் கூட நாம் பேசாமலே தான் இருக்கோம்.
பார்வைக்குள் ஒரு தெளிவு இல்லை நம் இருவருக்குமே
எதை நினைக்கிறோம் என்று ஒரு விசயத்தை பரிமாற்றம் செய்யமுடியவில்லை
இருண்ட கனவில் வாழ்க்கை வெளிச்சத்தை காண முயல்கிறோம்
விடிவதற்குள் கனவு கலைந்து விடுகிறது
இல்லை
நான் விழிப்பதற்க்கு முன்பே கனவு கலைந்து விடுகிறது.
மிஞ்சி இருப்பது என்னவோ பழைய நினைவுகளே
பழைய நினைவுகளை எத்தனை நாள் அசை போடுவது
அடிக்கடி தோன்றும் கனவுகளில் 'மறப்பது' போன்று ஒரு கனவு வேண்டும்
கனவிலாவது உன்னை மறக்க வேண்டும் இல்லையெனில் விடிந்த பின்பும் கனவு காண வேண்டும்

Friday, May 6, 2011

குறிஞ்சி மலர்

12 வருடங்களுக்கு முன்னால் பார்த்த குறிஞ்சி மலர்
இதோ இந்த வருடம் இந்த நாள் மலர்ந்து இருக்கிறது
காத்து இருந்ததால், பொறுத்து இருந்ததால் -மலர்ந்ததா?
மாற்றம் தெரியவே இல்லை. அதே மணம், அதே வண்ணம், அதே தோற்றம்
மறுபடியும் பார்க்க, அதே சந்தோசம் இல்லை,அதை விட சந்தோசம்,

மனதில் எத்தனை ஈர்ப்பு...ரோஜாவின் அழகும், மல்லிகையும் மனமும் கலந்த இதை
நேசிப்பதும் ரசிப்பதும் மனதின் தன்மை. அது குறையாமல்,மறவாமல் இருப்பதும் மனிதத்தின் தன்மை.

Saturday, February 26, 2011

காதல் ஒரு ஆறு.....

காதல் ஒரு ஆறு
காதல் ஒரு ஆறு போன்றது.
சில ஆறுகள் வற்றி விடும்....காதல் மறந்து விடும்
சில ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்....காதல் இருக்கும் எப்பவும்.
சில ஆறுகள் குட்டையாகி விடும்...ஞாபகங்கள் எங்கோ ஒரு மூலையில் தங்கி விடும்
சில ஆறுகள் அவ்வப்போது தண்ணிர் வரும்..காதல் நினைவுகளும் அப்படி தான்
சில ஆறுகள் மற்ற ஆறுகலோடு சேர்ந்து விடும். காதல் மாறிவிடும் வேறு ஒருவரோடு
சில ஆறுகள் கடலில் கலக்காமல் பாதியில் நின்றுவிடும்..காதலும் பாதியில் நின்றுவிடும்
இன்னும் சொல்லிகொண்டே போலாம்.தண்ணிர் இருக்கும் வரை..நினைவுகலும் அப்படி தான் காதலில்...SPP