Saturday, August 6, 2011

கனவாக' நீ

என் வீட்டில் நீ உன் தோழிகளுடன்
என்ன நிகழ்ச்சி என்று ஞாபகம் இல்லை
மாலை நேரம்
சரியான மழை பெய்து கொண்டு இருக்கிறது
உன் மீது ஒரு குழந்தை
நான் குழந்தையை தூக்க முயற்சிக்க, உன் மீது நான் விழ (தவறாமல்)
சிறிது நேரத்தில் உன் முகத்தில் இரத்தம்
உன் தோழிகள் சிரிக்க சொன்னார்கள், அது இரத்தம் இல்லை, வண்ண தூள் என்று
மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சி..காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும்.
-அட என்ன இது 20 வருடங்களுக்கு முன்னால் உண்மையாக நடந்து இருக்க வேண்டியவைகள், 20 வருடங்களுக்கு பின்னரும் தூக்கதில் கனவில்....

'கனவாக' நீ

Sunday, June 12, 2011

புது கனவு வேண்டும் தோழி

என்னைப் பற்றி நான் நினைத்தை விட
உன்னை பார்த்த நேரங்களை விட
உன்னைப் பற்றி நான் கண்ட கனவுகளின் நேரம் தான் அதிகம்
கனவுகளில் கூட நாம் பேசாமலே தான் இருக்கோம்.
பார்வைக்குள் ஒரு தெளிவு இல்லை நம் இருவருக்குமே
எதை நினைக்கிறோம் என்று ஒரு விசயத்தை பரிமாற்றம் செய்யமுடியவில்லை
இருண்ட கனவில் வாழ்க்கை வெளிச்சத்தை காண முயல்கிறோம்
விடிவதற்குள் கனவு கலைந்து விடுகிறது
இல்லை
நான் விழிப்பதற்க்கு முன்பே கனவு கலைந்து விடுகிறது.
மிஞ்சி இருப்பது என்னவோ பழைய நினைவுகளே
பழைய நினைவுகளை எத்தனை நாள் அசை போடுவது
அடிக்கடி தோன்றும் கனவுகளில் 'மறப்பது' போன்று ஒரு கனவு வேண்டும்
கனவிலாவது உன்னை மறக்க வேண்டும் இல்லையெனில் விடிந்த பின்பும் கனவு காண வேண்டும்

Friday, May 6, 2011

குறிஞ்சி மலர்

12 வருடங்களுக்கு முன்னால் பார்த்த குறிஞ்சி மலர்
இதோ இந்த வருடம் இந்த நாள் மலர்ந்து இருக்கிறது
காத்து இருந்ததால், பொறுத்து இருந்ததால் -மலர்ந்ததா?
மாற்றம் தெரியவே இல்லை. அதே மணம், அதே வண்ணம், அதே தோற்றம்
மறுபடியும் பார்க்க, அதே சந்தோசம் இல்லை,அதை விட சந்தோசம்,

மனதில் எத்தனை ஈர்ப்பு...ரோஜாவின் அழகும், மல்லிகையும் மனமும் கலந்த இதை
நேசிப்பதும் ரசிப்பதும் மனதின் தன்மை. அது குறையாமல்,மறவாமல் இருப்பதும் மனிதத்தின் தன்மை.

Saturday, February 26, 2011

காதல் ஒரு ஆறு.....

காதல் ஒரு ஆறு
காதல் ஒரு ஆறு போன்றது.
சில ஆறுகள் வற்றி விடும்....காதல் மறந்து விடும்
சில ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்....காதல் இருக்கும் எப்பவும்.
சில ஆறுகள் குட்டையாகி விடும்...ஞாபகங்கள் எங்கோ ஒரு மூலையில் தங்கி விடும்
சில ஆறுகள் அவ்வப்போது தண்ணிர் வரும்..காதல் நினைவுகளும் அப்படி தான்
சில ஆறுகள் மற்ற ஆறுகலோடு சேர்ந்து விடும். காதல் மாறிவிடும் வேறு ஒருவரோடு
சில ஆறுகள் கடலில் கலக்காமல் பாதியில் நின்றுவிடும்..காதலும் பாதியில் நின்றுவிடும்
இன்னும் சொல்லிகொண்டே போலாம்.தண்ணிர் இருக்கும் வரை..நினைவுகலும் அப்படி தான் காதலில்...SPP

Friday, April 16, 2010

தெரிந்தாலே போதும் தோழி.

உனக்கு புரியாமால் போனாலும் தெரிந்தாலே போதும் தோழி...
நீ எங்கு இருக்கிறாய் என்று தெரிந்தால் போதும்
உன் முகம் பார்க்க நான் முயற்சிக்க வில்லை, விருப்பமும் இல்லை.
உன்னோடு பேச முயற்சிக்க வில்லை, விருப்பமும் இல்லை.
உன்னை பற்றி அதிகம் தெரிந்த கொள்ளவும் எனக்கு ஆசை இல்லை
ஆனால் நீ எங்கு இருக்கிறாய் என்று தெரிந்தாலே போதும்

Saturday, January 23, 2010

என் மனசு உனக்கு சொந்தமில்லை

பார்த்த நொடியில் இருந்து நிமிடங்களாகுவதுற்கு முன்பே
என் மனதில் மீதம் இருந்த வெற்றிடத்தில் உன் பார்வையும், உன்முகமும் ஆர்ப்பரித்துக் கொண்டது.
மணிதுளிகளாகும் முன்பே என் மனம் முழுவதும் நீயே அடைத்துகொண்டாய்.
அடடா...என் பார்வையில் இருந்து நீ , நான் உன்னை விட்டு விலக நேர்ந்த போது......!
வரவில்லையே என் மனது என்னோடு. உன்னை பற்றிய எண்ணங்களும் , உன் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டது.

என் உடல் மட்டும் நடந்தது, மனம் இல்லாம் போனது. உண்மையைலே மனமே இல்லாமல்....உன்னோடு தான் ஒட்டிக் கொண்டதே.

யார் நீ? என் மனைவியா? என் தோழியா? ? என் சகோதிரியா? இல்லை முன்பின் தெரிந்த முகமா..?
இல்லையா.
பின் எப்படி என்மனது உன்னை விட்டு என்னோடு வரவில்லை.

எதுவுமே சொந்தமில்லாத நீ, என் மனதை மட்டும் சொந்தமாக்கி கொள்ள நான் விடுவேனா?
தந்து விடு என் மனதை. அது எனக்கு சொந்தமானது. உன்னை போன்ற (அழகான) அன்னியர்கள் ஆக்கிரமித்தால் நான் பித்தனாகி விடுவேன்.

திருப்பிக் கொடு பெண்ணே!. இல்லை திரும்பி பார் கண்ணே!!.

Monday, September 21, 2009

தொலைந்த தோழியின் நட்பு

எப்பொழுதோ பிரிந்து மறைந்து போன முகம்
அவ்வப்போது வந்து போகும் நினைவுகள்
நினைவுகள் வரும்போது எல்லாம், மனதுக்குள் நினைப்பதுண்டு
என்றாவது ஒரு நாள், எப்பவாவது உன்னை பார்க்கும் போது
இது தான் கேட்க வேண்டும் என்று தோன்றும்...உன்னிடமான எனது நட்பு
காமத்திற்கும், பணத்திற்கும், கெடுதலுக்கும் அப்பாற்பட்டது என்று ஒருபோதும் நீ நினைக்கவில்லையா நாம் அவரவர் வாழ்க்கையை தேடி போன பிறகு?. நினைத்து இருந்தால் நம் நட்பை தொடர ஒருபோதும் நீ முயற்சி செய்யவில்லையா என் தோழி?