Saturday, January 23, 2010

என் மனசு உனக்கு சொந்தமில்லை

பார்த்த நொடியில் இருந்து நிமிடங்களாகுவதுற்கு முன்பே
என் மனதில் மீதம் இருந்த வெற்றிடத்தில் உன் பார்வையும், உன்முகமும் ஆர்ப்பரித்துக் கொண்டது.
மணிதுளிகளாகும் முன்பே என் மனம் முழுவதும் நீயே அடைத்துகொண்டாய்.
அடடா...என் பார்வையில் இருந்து நீ , நான் உன்னை விட்டு விலக நேர்ந்த போது......!
வரவில்லையே என் மனது என்னோடு. உன்னை பற்றிய எண்ணங்களும் , உன் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டது.

என் உடல் மட்டும் நடந்தது, மனம் இல்லாம் போனது. உண்மையைலே மனமே இல்லாமல்....உன்னோடு தான் ஒட்டிக் கொண்டதே.

யார் நீ? என் மனைவியா? என் தோழியா? ? என் சகோதிரியா? இல்லை முன்பின் தெரிந்த முகமா..?
இல்லையா.
பின் எப்படி என்மனது உன்னை விட்டு என்னோடு வரவில்லை.

எதுவுமே சொந்தமில்லாத நீ, என் மனதை மட்டும் சொந்தமாக்கி கொள்ள நான் விடுவேனா?
தந்து விடு என் மனதை. அது எனக்கு சொந்தமானது. உன்னை போன்ற (அழகான) அன்னியர்கள் ஆக்கிரமித்தால் நான் பித்தனாகி விடுவேன்.

திருப்பிக் கொடு பெண்ணே!. இல்லை திரும்பி பார் கண்ணே!!.

Monday, September 21, 2009

தொலைந்த தோழியின் நட்பு

எப்பொழுதோ பிரிந்து மறைந்து போன முகம்
அவ்வப்போது வந்து போகும் நினைவுகள்
நினைவுகள் வரும்போது எல்லாம், மனதுக்குள் நினைப்பதுண்டு
என்றாவது ஒரு நாள், எப்பவாவது உன்னை பார்க்கும் போது
இது தான் கேட்க வேண்டும் என்று தோன்றும்...உன்னிடமான எனது நட்பு
காமத்திற்கும், பணத்திற்கும், கெடுதலுக்கும் அப்பாற்பட்டது என்று ஒருபோதும் நீ நினைக்கவில்லையா நாம் அவரவர் வாழ்க்கையை தேடி போன பிறகு?. நினைத்து இருந்தால் நம் நட்பை தொடர ஒருபோதும் நீ முயற்சி செய்யவில்லையா என் தோழி?

Saturday, July 28, 2007

நினைத்தது மட்டும்

எத்தனை பெண்களை பார்த்த் இருக்கிறேன் இதுவரையிலும். அவர்களில் சிலரை பார்க்கும் போது இவர்களே எனக்கு மனைவியாக தோழியாக வர வேண்டும் என்று நினைத்தது உண்டு. வந்தால் எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கை இருக்கும் என்று எண்ணி பார்த்தது உண்டு.அவர்கள் மனதுக்குள் சில நிமிடங்கள் தேவதையாக அழகியாக தோன்றியது உண்டு. இப்படி மனதுக்குள் வந்து போனவர்கள் ஏராளம். நினைவில் நிறுத்தி பார்க்க முடியாத அளவுக்கு பல சம்பவங்கள்.அத்தனை பேரிலும் எனக்கு யாரும் இன்றுவரைமனைவியாகவும் இல்லை, தோழியாகவும் இல்லை, காதலியாகவும் இல்லை.
அவர்களை நினைத்த்து போலவே உன்னையும் நினைத்து இருக்கிறேன்உன்னை முதன் முதலாக பார்த்த போது.எனக்கு, எனக்குள் நீ காதலியாகவும், தோழியாகவும், மனைவியாகவும் ரொம்ப நாள் வாழ்ந்தாய். இப்பவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நிசத்தில் தராத சந்தோசத்தை நினைவில் தந்து கொண்டு இருக்கிறாய்.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்...அவர்களுக்கும் உனக்கும்அவர்கள் கிடைக்க வில்லை என்பதற்க்காகநான் வருத்த பட்டதில்லை கண்ணீர் விட்டதில்லை. நீ மட்டும் எனக்கு இல்லை என்றான போது,நீ மட்டும் என் மனைவியாக வில்லை என்ற போது வருத்த பட்டதிற்கு அளவே இல்லை, கண்ணீர்க்கு பஞ்சமே இல்லை.
இன்றும், என்றும் உனக்காக இந்த பிறவியில் உன்னை நான் இழந்ததற்காக,உன்னோடு வாழாமல் போனாதற்காக, என் மனதுக்குள் எப்பவும் வருத்தமும், கண்ணீரும் நிரம்பி இருக்கும்.

Wednesday, April 11, 2007

புரியவில்லையாடி

அப்பொழுது நீ பேசிய பேச்சுகள்
இப்பொழுது தான் புரிகிறது அவைகளை நினைவு கூரும் போது
இந்த அரமண்டை தலைய தலைய மட்டுமே ஆட்டியது அப்போது.
உன் பேச்சையும், உன்னையும் இரசிப்பதலையைய்யே காலம் கடந்தது.
இன்று உண்மையாகவே காலம் கடந்து உன் நினைவுகளை நிறுத்தும் போது
எத்தனை உள் அர்த்தத்தோடும். நுணுக்கமாகவும் பேசி இருக்கின்றாய்
ஆச்சர்யமாகவும், வியப்பாகவுமே இருக்கிறது இப்போதும் எனக்கு

புரியவில்லையடி.
- நீ புரிந்து கொண்டு தான் பேசினாயா? இல்லை
- எனக்கு (ஆவது) புரியும் என்று பேசினாயா?
புரியவில்லையாடி?
- நான் விவரம் இல்லாதவன் என்று உனக்கு புரியவில்லையாடி?
- நானும் உன்னை மாதிரி விவரமாக இருந்து இருந்தா விளைவுகள் விவகாரமாக அல்லவா முடிந்து இருக்கும் என்று.

உன்னோட நினைவுகள்

என்னிடம் இன்னமும் பத்திராமாக இருக்கிறது..
நீ கொடுத்த
வாழ்த்து அட்டைகள்.
மிட்டாய்
டைரிகள்
பேனாக்கள்
காதல் கடிதங்கள். இன்னும் பல...

நீ கொடுத்த அத்தனையும் பத்திரமாகவே வைத்து இருக்கிறேன்.
ஏன் தெரியுமா? உன் ஞாபகமாக இருக்கவா?

எனக்கு தெரியும்.
இந்த குரங்கு மனசு இன்னொரு பொண்ணுக்கும் இடம் கொடுக்கும்
உன் நினவுகள் அற்று போகும் ஒரு நாள்.


நான் காதலுக்கு கொடுக்கும் மரியாதை.
என் உள்ளத்தில் உன் நினைவுகளை வைக்கா விட்டாலும்
என் இல்லத்தில் வைக்க தான் நீ கொடுத்தவைகளை நினைவுகளாக!

அப்படி இல்லை என்றால்
என்னை வீட்டில் வைக்க மாட்டால்
என் புது மனைவி.

Monday, April 9, 2007

இன்னமும் தெரியவில்லை

நாலு விசயம் நல்லது கெட்டது அறியாத பருவம் எனக்கு
உன்னை பிடிக்க ஆரம்பித்தது.
இன்றளவும் நினைவில் தேடி பார்க்கிறேன்
உன்னை எனக்கு பிடித்து போன தருணத்தை.

எத்தனையோ நினைவுகளை என்னால் அசை போட முடிகிறது.
என் கண் பார்வையில் இருந்து மறைந்தாய்.
மற்றவனை கரம் பிடித்தாய்.

உன்னை பற்றி நிறையவே கேள்வி படுகிறேன்.
வருத்தமே இல்லை
எனக்கு நீ இல்லை என்ற போதிலும்.
ஆனாலும் உன் மீது நான் கொண்டு இருக்கும் பிடிப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது.

ஒரு வேலை நான் உன் எல்லாம் நினைவுகளையும் மறந்து போகலாம்
அந்த தருணம் உன்னை முதன் முதாலாக நான் விரும்பியதை நினைவில் கூர்வேயானால்
இல்லை இன்னொருத்தி என்னை ஆக்கிரமிப்பு கொள்ளும்வரை

அடி மனது சொல்லி கொண்டே இருக்கிறது

"உன்னவளின் நினைவுகளை அசை போட்டு கொண்டே இரு உன் உயிர் உள்ளவரை
ஏனென்றால் அவள் உன்னை விரும்பவும் இல்லை.
நீ இதுவரை அவளை வெறுக்கவும் இல்லை.

மற்றும்

உனக்கு அவள் இதுவரையிலும் வெறுத்ததாக தெரியவில்லை.
நீ விரும்பியதும் அவளுக்கும் இன்னமும் தெரியவில்லை."

Saturday, April 7, 2007

முத்தம் வாழ்க்கைகாகவே

காதலித்த போது
என்னின் ஒவ்வொரு செயல்களும்
உன்னிடம் இருந்து ஒரு முத்தமாவது
வாங்குவற்காகவே இருந்தது
ஆனால் நீ எந்த முயற்சி எடுக்காமலே
மிக சுலபமாக என்னிடம் இருந்து
எத்தனையோ முத்ததை வாங்கி கொள்கிறாய்.
நான் முத்தம் கொடுக்கவும் சரி முத்தம் வாஙகவும் சரி
நான் அதற்காக ஒரு போரட்டமே நடத்த வேண்டி இருந்தது.
என்னை நீ எதிர்த்து போராடாமலே ஜெய்த்து இருக்கிறாய் பல தடவை.
ஆயிரம் முறை நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் தோற்றாலும்
ஒரு முறை என்னிடம் நீயாகவே கொடுத்த முத்தத்தினால்
உன் உயிரையே கொடுத்து என்னை ஜெய்க்க வைத்தாய்.
இப்பொழுது தான் புரிகிறது நான் வெறும் முத்ததிற்காகவே போராடி இருக்கேன்....
நீயோ எனக்காகவே போராடி இருக்கிறாய் என்று!