Tuesday, August 29, 2023

நேசிப்பிற்கான மொழி மெளனமானது !!


பேசும் வார்த்தைகளின் சத்தங்கள் அற்று போயின.

பார்த்த பார்வைகள் மறைந்து சென்றன 

நடந்தவைகள் கடந்தவைகளாகின.

எண்ணங்கள் உறங்கி போயின 

ஒவ்வொரு இதய துடிப்பும் உன்னை சுவாசமாக உள்வாங்கின ..

நொடிகளுக்கு இடையிலான நேரம் கூட  உன்னை நினைக்காமல் இருப்பதில்லை ..

உன்னை நேசிப்பதற்கான என் மொழி மெளனமானது 

அந்த மெளனமே  உனக்கான மொழியாகின ..!!!