Friday, July 7, 2023

நானாக நீ!!!



காத்திருந்த நாட்கள் , மணி துளிகள் , நொடிகள்..

ஆசை போட்டு இருந்த நேரங்கள்.

உன்னை பார்க்காத நேரங்கள், நினைக்காத தூக்கம், 

கனவில் வந்த நீ, 365 நாட்கள் வருடத்தில்...அனைத்திலும் நீயே.

நானாக நீ இருந்தாய். என் மனசாகி போனாய்.

என்னருகில்..இல்லை உன்னருகில் சில நேரங்கள் இருந்தும் நான் ஊமையாகி போனேன், உள்ளத்திலே எரிமலையாய் சிதறி போனேன்...



இந்த வாழ்க்கை , உறவுகள், பணம், சமுதாயம், ..இந்த மொழியில் படைத்த அத்தனை விசயங்களும் என்னில் அடங்கி போனாய் நீயாக..

நானாக நான் இல்லை. நீயாக நான் இருக்கிறேன். இல்லை. நானாக  நீ இருக்கிறாய் ...


நான் செய்த புண்ணியமா,  

நீயாக நான்..எண்ணத்தில்  மட்டுமா? 


என் மனதின் உருவமா நீ? நீயாக  என் மனசு..

உயிரில்லாமல் நீயும் உடலில்லாமல் நானும் வாழும் இந்த பிறவி .. 

உயிர் இங்கேயேயும் உடல் அங்கேயும் ..நானாக நீ!!!