புது கனவு வேண்டும் தோழி
என்னைப் பற்றி நான் நினைத்தை விட
உன்னை பார்த்த நேரங்களை விட
உன்னைப் பற்றி நான் கண்ட கனவுகளின் நேரம் தான் அதிகம்
கனவுகளில் கூட நாம் பேசாமலே தான் இருக்கோம்.
பார்வைக்குள் ஒரு தெளிவு இல்லை நம் இருவருக்குமே
எதை நினைக்கிறோம் என்று ஒரு விசயத்தை பரிமாற்றம் செய்யமுடியவில்லை
இருண்ட கனவில் வாழ்க்கை வெளிச்சத்தை காண முயல்கிறோம்
விடிவதற்குள் கனவு கலைந்து விடுகிறது
இல்லை
நான் விழிப்பதற்க்கு முன்பே கனவு கலைந்து விடுகிறது.
மிஞ்சி இருப்பது என்னவோ பழைய நினைவுகளே
பழைய நினைவுகளை எத்தனை நாள் அசை போடுவது
அடிக்கடி தோன்றும் கனவுகளில் 'மறப்பது' போன்று ஒரு கனவு வேண்டும்
கனவிலாவது உன்னை மறக்க வேண்டும் இல்லையெனில் விடிந்த பின்பும் கனவு காண வேண்டும்