நினைத்தது மட்டும்
எத்தனை பெண்களை பார்த்த் இருக்கிறேன் இதுவரையிலும். அவர்களில் சிலரை பார்க்கும் போது இவர்களே எனக்கு மனைவியாக தோழியாக வர வேண்டும் என்று நினைத்தது உண்டு. வந்தால் எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கை இருக்கும் என்று எண்ணி பார்த்தது உண்டு.அவர்கள் மனதுக்குள் சில நிமிடங்கள் தேவதையாக அழகியாக தோன்றியது உண்டு. இப்படி மனதுக்குள் வந்து போனவர்கள் ஏராளம். நினைவில் நிறுத்தி பார்க்க முடியாத அளவுக்கு பல சம்பவங்கள்.அத்தனை பேரிலும் எனக்கு யாரும் இன்றுவரைமனைவியாகவும் இல்லை, தோழியாகவும் இல்லை, காதலியாகவும் இல்லை.
அவர்களை நினைத்த்து போலவே உன்னையும் நினைத்து இருக்கிறேன்உன்னை முதன் முதலாக பார்த்த போது.எனக்கு, எனக்குள் நீ காதலியாகவும், தோழியாகவும், மனைவியாகவும் ரொம்ப நாள் வாழ்ந்தாய். இப்பவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நிசத்தில் தராத சந்தோசத்தை நினைவில் தந்து கொண்டு இருக்கிறாய்.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்...அவர்களுக்கும் உனக்கும்அவர்கள் கிடைக்க வில்லை என்பதற்க்காகநான் வருத்த பட்டதில்லை கண்ணீர் விட்டதில்லை. நீ மட்டும் எனக்கு இல்லை என்றான போது,நீ மட்டும் என் மனைவியாக வில்லை என்ற போது வருத்த பட்டதிற்கு அளவே இல்லை, கண்ணீர்க்கு பஞ்சமே இல்லை.
இன்றும், என்றும் உனக்காக இந்த பிறவியில் உன்னை நான் இழந்ததற்காக,உன்னோடு வாழாமல் போனாதற்காக, என் மனதுக்குள் எப்பவும் வருத்தமும், கண்ணீரும் நிரம்பி இருக்கும்.